2 குழந்தைகளுடன் இளம்பெண் மாயம்

சேலம், ஜூலை 16: சேலம் பெரியபுத்தூர் பாரதி தெருவை சேர்ந்தவர் பெரியசாமி (30). தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி மதுபாலா (27). இவர்களுக்கு 6 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. ஹரிணி (3), ரஞ்சனி (3) என 2 பெண் குழந்தைகள் உள்ளனர். மதுபாலா நகை கடை ஒன்றில் வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு டூவீலரில் குழந்தைகளுடன் வெளியே சென்ற மதுபாலா, பின்னர் வீடு திரும்பவில்லை. அவரது கணவர் கொடுத்த புகாரின்பேரில் பேர்லாண்ட்ஸ் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Advertising
Advertising

Related Stories: