×

நாளை சந்திர கிரகணம் கன்னியாகுமரி, சுசீந்திரம் கோயில்களில் நடைதிறக்கும் நேரம் மாற்றம்

கன்னியாகுமரி, ஜூலை 16: நாளை அதிகாலை சந்திர கிரகணத்தை முன்னிட்டு கன்னியாகுமரியில் கோயில் நடைதிறக்கும் நேரம் மாற்றப்பட்டுள்ளது. நாளை அதிகாலை 1.14 மணி முதல் 4.15 வரை சந்திர கிரகணம் ஆகும். இதனை முன்னிட்டு கன்னியாகுமரி பகவதி அம்மன் கோயிலில் இன்று இரவு பகவதி அம்மன் உள்பட அனைத்து சுவாமி விக்ரகங்களும், தர்ப்பைப்புல் மற்றும் பட்டுத்துணியால் மூடப்படுகிறது. மேலும் வழக்கமாக 4.30 மணிக்கு திறக்கப்படும் கோயில் நடை, நாளை காலை 5 மணிக்கு திறக்கும். இதுபோல் சுசீந்திரம் தாணுமாலய சுவாமி ேகாயில் உள்பட பல்வேறு கோயில்களில், காலை 5 மணிக்கு பின்னரே நடை திறக்கப்படுகிறது.


Tags :
× RELATED மழைநீர் வடிகாலில் கழிவை விட்ட...