காமராஜர் பிறந்த நாள் விழா கல்வி பரிசளிப்பு நிகழ்ச்சி

சேலம், ஜூலை 12: சேலத்தில், சான்றோர்குல அறக்கட்டளை சார்பில் காமராஜரின் 117வது பிறந்த நாள் விழா, கல்வி பரிசளிப்பு நிகழ்சி வருகிற 14ம்தேதி நடக்கிறது. இதுதொடர்பாக சான்றோர்குல நாடார் அறக்கட்டளை கவுரவ தலைவர் துரைசாமி விடுத்துள்ள அறிக்கை,சேலம் மாவட்ட சான்றோர்குல நாடார் அறக்கட்டளை சார்பில், காமராஜரின் 117வது பிறந்த நாள் விழா மற்றும் 2வது ஆண்டு கல்வி பரிசளிப்பு விழா வருகிற 14ம் தேதி நடக்கிறது. அன்று காலை 9 மணிக்கு எருமாபாளையம் பைபாஸ் ரோட்டில் உள்ள முத்தாயம்மாள் திருமண மண்டபத்தில் தொடங்கும் விழாவிற்கு, அறக்கட்டளை தலைவர் ரவிமாதவன் தலைமை வகிக்கிறார். செயலாளர் செல்வராமலிங்கம் வரவேற்கிறார்.

Advertising
Advertising

அறக்கட்டளை துணை செயலாளர் சங்கர், துணை ஒருங்கிணைப்பாளர் பெரியசாமி, துணை தலைவர் சுவாமிநாதன், அலுவலக பொறுப்பாளர் ரங்கசாமி, திருமண தகவல் மைய பொறுப்பாளர் பொன்னுசாமி நாடார் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர். விழாவில் மாநில தகவல் உரிமை ஆணையர் செல்வராஜ், நாடார்குல குருமடத்தின் தலைவர் நடேசன் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கின்றனர். சின்னத்திரை வசனகர்த்தா அமிர்தராஜ் வாழ்த்துரை வழங்குகிறார். விழாவில் பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கு பாலகிருஷ்ணன், காயத்ரி ரவிமாதவன் மற்றும் பழனிமுத்து ஆகியோர் பரிசளிக்கின்றனர். கவுரவ தலைவரும், ஒருங்கிணைப்பாளருமான துரைசாமி, பொருளாளர் ஆறுமுகம் ஆகியோர் விழாவிற்கான ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். அறக்கட்டளை நிர்வாகி மணிவேலன் நன்றி கூறுகிறார்.

Related Stories: