வேலைவாய்ப்பு அலுவலகம் செல்ல தேவையில்லை 10ம் வகுப்பு, பிளஸ் 2 மாணவர்கள் கல்வித்தகுதியை பள்ளிகளில் பதிவு செய்யலாம் கலெக்டர் தகவல்

திருவண்ணாமலை, ஜூலை 12: பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 படித்து முடித்த மாணவர்கள், தங்களுடைய கல்வித்தகுதியை பள்ளியிலேயே இணைய தளத்தில் பதிவு செய்து, வேலைவாய்ப்பு அலுவலக அடையாள அட்டை பெறலாம் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து, திருவண்ணாமலை கலெக்டர் ேக.எஸ்.கந்தசாமி தெரிவித்திருப்பதாவது:பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 படித்து முடித்த மாணவர்கள், தாங்கள் படித்த பள்ளிகளின் மூலம் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு செய்யும் வசதி செய்யப்பட்டுள்ளது. அதன்படி, 2018-2019ம் கல்வி ஆண்டில் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு மதிப்பெண் சான்றிதழ் நேற்று முன்தினம் முதல் வழங்கப்படுகிறது.எனவே, மதிப்பெண் சான்று பெறும் மாணவர்கள், தங்களுடைய கல்வித்தகுதியை சம்பந்தப்பட்ட பள்ளிகளிலேயே பதிவு செய்துகொள்ளலாம். வரும் 24ம் தேதி வரை பதிவு செய்யும் அனைவருக்கும் பதிவு மூப்பு தேதி ஒரே நாளாக பதிவு செய்யப்படும்.அரசு மற்றும் அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளிகள், மெட்ரிக் பள்ளிகள், தனியார் பள்ளி மாணவர்களும், தங்களுடைய பள்ளிகளில் இந்த வசதியை பயன்படுத்திக் கொள்ளலாம்.எனவே, ஆதார் அட்டை, குடும்ப அட்டை, சாதிச் சான்றிதழ் மற்றும் பத்தாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் ஆகிய விவரங்களுடன் சம்பந்தப்பட்ட பள்ளிகளை அணுகி மாணவ, மாணவிகள் வேலைவாய்ப்பு பதிவுகளை செய்துகொள்ளலாம்.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Tags :
× RELATED தண்டராம்பட்டு அரசு பள்ளியில் மாணவர்களின் கற்றல் திறனை கலெக்டர் ஆய்வு