செங்கத்தில் பெண் போலீஸ் இன்ஸ்பெக்டரை கண்டித்து ஆட்டோ டிரைவர்கள் 2வது நாளாக வேலைநிறுத்தம்

செங்கம், ஜூலை 12: செங்கத்தில் பெண் போலீஸ் இன்ஸ்பெக்டரை கண்டித்து ஆட்டோ டிரைவர்கள் நேற்று 2வது நாளாக வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். செங்கம் அடுத்த காயம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் முரளி(40), ஆட்டோ டிரைவர். இவர் கடந்த 10ம் தேதி செங்கம் புதிய பஸ் நிலையத்தில் பயணிகளுக்காக ஆட்டோவில் காத்திருந்தார். அப்போது, அங்கு வந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயந்தி, ‘ஆட்டோவை ஏன் இங்கு நிறுத்தினாய்’ எனக்கூறி முரளியை தாக்கினாராம். இதை தட்டி கேட்ட ஆட்டோ டிரைவர்கள் சங்கத்திரை இன்ஸ்பெக்டரிடம் ஆபாசமாக பேசினாராம். இதனை கண்டித்து செங்கத்தில் நேற்று முன்தினம் காலை முதல் ஆட்டோ டிரைவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் டிஎஸ்பி குத்தாலிங்கம் நடத்திய பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்தது. தொடர்ந்து நேற்றும் 2வது நாளாக ஆட்டோ டிரைவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். செங்கத்தில் ஆட்டோக்கள் ஓடாததால் பொதுமக்கள் பெரிதும் அவதிக்குள்ளாகினர்.

Tags :
× RELATED தண்டராம்பட்டு அரசு பள்ளியில் மாணவர்களின் கற்றல் திறனை கலெக்டர் ஆய்வு