×

டேங்க்கில் மின்மோட்டார் பொருத்தி குடிநீர் விநியோகம்

மரக்காணம், ஜூன் 27:  மரக்காணம் ஒன்றியத்திற்கு உட்பட்டது சிறுவாடி ஊராட்சி. இங்குள்ள முருக்கேரி பகுதியில் திண்டிவனம்- மரக்காணம் சாலையில் கடந்த ஓர் ஆண்டுக்கு முன் ரூ.1.6 லட்சம் மதிப்பில் குடிநீர் மினிடேங்க் அமைக்கப்பட்டது. இந்த மினிடேங்க்கில் இருந்துதான் அப்பகுதி பொதுமக்கள் தங்களுக்கு தேவையான குடிநீரை எடுத்து வந்தனர். ஆனால் கடந்த 6 மாதத்திற்கு முன் இந்த மினிடேங்க்கில் பொருத்தப்பட்ட மின்மோட்டார் பழுதாகிவிட்டது. இதனால் இந்த மின்மோட்டாரை ஊராட்சி நிர்வாகத்தினர் சரி செய்ய எடுத்துச்சென்றனர். ஆனால் மீண்டும் அந்த மோட்டாரை இங்குள்ள போர்வெல்லில் பொருத்தவில்லை. இதனால் குடிநீர் மினிடேங்க் காட்சி பொருளாக உள்ளது. இதுகுறித்து தினகரன் நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டது. இதனைத்தொடர்ந்து மரக்காணம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டு பழுதான மின்மோட்டாரை சரிசெய்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு குடிநீர் வினியோகம் செய்தனர். இதனைப்பார்த்த அப்பகுதி பொதுமக்கள் அதிகாரிகளுக்கு நன்றி தெரிவித்தனர்.

Tags :
× RELATED பாலியல் பலாத்காரம் செய்து சிறுமியை கொன்ற வாலிபருக்கு ஆயுள் தண்டனை