×

வெள்ளிமேடுபேட்டையில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

திண்டிவனம், ஜூன் 26: திண்டிவனம் அடுத்த வெள்ளிமேடுபேட்டையில் வசிக்கும் மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தனர். அதில், சாலை ஓரங்களில் நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான இடங்களை ஆக்கிரமிப்பு செய்து கட்டப்பட்டுள்ள கடைகளால் போக்குவரத்து  நெரிசல் ஏற்படுகிறது. மேலும் அருகில் அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் ஆரம்ப  சுகாதார நிலையம் உள்ளதால் நோயாளிகள், மாணவ, மாணவிகள் பேருந்துக்காக  நடுரோட்டில் காத்துக் கிடக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளதாகவும் புகார் கூறியிருந்தனர்.  இதையடுத்து மாவட்ட ஆட்சியர் அரசு இடங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற  உத்தரவிட்டார். அதன்பேரில் நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர் லெனின்,  உதவி பொறியாளர் சூர்யா, வட்டாட்சியர் ரகோத்தமன், ஒலக்கூர் பிடிஓ சீனிவாசன்  உள்ளிட்ட அரசு அலுவலர்கள் முன்னிலையில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் பொக்லைன் இயந்திரங்கள் மூலம் ஆக்கிரமிப்பில் உள்ள அனைத்து கடைகளும் அகற்றப்பட்டன.  இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Tags :
× RELATED பாலியல் பலாத்காரம் செய்து சிறுமியை கொன்ற வாலிபருக்கு ஆயுள் தண்டனை