×

பிரதமரின் விவசாயிகளுக்கான நிதியுதவி திட்டத்தில் சிறு விவசாயிகளை தொடர்ந்து பெரு விவசாயிகளுக்கு ஆண்டுக்கு 6 ஆயிரம் 15ம் தேதிக்குள் பட்டியல் தயாரிக்க உத்தரவு

ேவலூர், ஜூன் 26: பிரதமரின் விவசாயிகளுக்கான நிதியுதவி திட்டத்தில் சிறு விவசாயிகளை தொடர்ந்து பெரு விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ₹6 ஆயிரம் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதற்கான பட்டியல் தயாரிக்கும் பணியை 15ம் தேதிக்குள் முடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இந்தியாவில் 5 ஏக்கருக்கு குறைவாக நிலம் வைத்திருக்கும் சிறு, குறு விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ₹6 ஆயிரம் நிதியுதவி வழங்கப்படும் என்று கடந்த பிப்ரவரி மாதம் மத்திய அரசு இடைக்கால பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. இந்த தொகை ஆண்டுக்கு 3 தவணைகளாக தலா ₹2,000 வீதம் விவசாயிகளின் வங்கி கணக்கில் செலுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

கடந்த பிப்ரவரி மாதம் 24ம் தேதி விவசாயிகளுக்கு முதற்கட்டமாக ₹2 ஆயிரம் நிதியுதவி திட்டம் தொடங்கப்பட்டது. மக்களவை தேர்தலால் கடந்த 3 மாதங்களாக விவசாயிகளுக்கு நிதியுதவி வழங்கும் திட்டம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்தது. தற்போது மீண்டும் இத்திட்டத்தில் 2ம் கட்டமாக விவசாயிகளுக்கு நிதியுதவி வழங்குவதற்காக நடவடிக்கைகள் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். இத்திட்டத்தில் சிறு, குறு விவசாயிகளை தொடர்ந்து பெரு விவசாயிகளுக்கு ஆண்டு ₹6 ஆயிரம் நிதியுதவி வழங்க அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக பெரு விவசாயிகளின் பட்டியலை சேகரிக்க அந்தந்த மாநில வேளாண், தோட்டக்கலை, வருவாய்த்துறை அதிகாரிகள் பட்டியலை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இதுகுறித்து வேளாண் அதிகாரிகள் கூறுகையில், ‘பிரதமரின் விவசாயிகளுக்கான நிதியுதவி திட்டத்தில் சிறு, குறு விவசாயிகளை தொடர்ந்து 5 ஏக்கருக்கு மேல் விவசாயம் செய்யும் பெரு விவசாயிகளுக்கு நிதியுதவி திட்டம் வழங்க அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக வருவாய்த்துறையினருடன், வேளாண் அலுவலர்கள் விவசாயிகளின் பட்டியல் சேகரிக்கும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. இப்பணியை வரும் 15ம் ேததிக்குள் முடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் பெரு விவசாயிகள் பென்ஷன் பெறுபவர்களாக இருக்கக்கூடாது, மேலும் பகுதி நேரமாக விவசாயி இருக்கக்கூடாது என்று உள்ளிட்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது’ என்றனர்.

Tags :
× RELATED சர்ச் பாதிரியார் அதிரடி கைது மதமாற்றம் செய்ய முயன்றதாக பெண் புகார்