×

ஆபத்தான நிலையில் வீரபாண்டி முல்லையாற்றில் குளியலாடும் குழந்தைகள்

தேனி, ஜூன் 21: தேனி அருகே வீரபாண்டி கவுமாரியம்மன் கோயில் அருகே முல்லையாறு உள்ளது. இந்த ஆற்றின் நடுவே தடுப்பணை  கட்டப்பட்டுள்ளது. முல்லைப் பெரியாற்றில் தண்ணீர் திறந்து விடும்போது வரும் நீர் தடுப்பணையின் ஒரு புறம் தேங்கி அதில் இருந்து வழிந்து விழும் அழகை பொதுமக்கள் பார்த்து மகிழ்ந்து வருகின்றனர். தடுப்பணையின் தண்ணீர் தேங்கும் பகுதியில் கூட்டுக் குடிநீர் திட்டத்திற்காக சுமார் 3 உறைகிணறுகள் உள்ளன. இப்பகுதியில் மணல் அரிப்பு ஏற்பட்டு ஆங்காங்கே ஆபத்தான பள்ளங்கள் உள்ளன. இதனையறியாமல் வெளியூர்களில் இருந்து வரும் பயணிகள் ஆற்றில் இறங்கி குளிக்கும்போது ஆபத்தான பள்ளங்களில் விழுந்து உயிரிழந்து விடுகின்றனர்.

நேற்று முன்தினம் முல்லையாற்று தடுப்பணை பகுதியில் உள்ள உறைகிணறுகள் உள்ள பகுதியில் ஏராளமான பயணிகள் தங்களின் சின்னஞ்சிறு குழந்தைகளுடன் ஆற்றில் குளித்தனர். சில பயணிகள் குளிப்பதை பார்த்து இச்சாலையில் சென்ற பயணிகள் பலரும் ஆற்றிற்கு வந்து குளிக்கத் தொடங்கினர். ஆற்றில் தொடர்ந்து தண்ணீரில் மூழ்கி உயிரிழந்து வரும் நிலையில் பேரூராட்சி நிர்வாகமோ, பொதுப்பணித் துறை நிர்வாகமோ ஆற்றிற்குள் எவ்வித பாதுகாப்புமின்றி குளிக்க அனுமதி அளிக்கக்கூடாது என வீரபாண்டி பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

Tags : Children ,
× RELATED ஹரியாணாவில் தனியார் பள்ளிப் பேருந்து...