×

காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி உல்லாசம் இளம்பெண்ணை ஆபாச புகைப்படம் எடுத்து கணவருக்கு அனுப்பி வைப்பு: பாத்திரக்கடை உரிமையாளர் கைது

திருவண்ணாமலை, ஜூன் 21: திருவண்ணாமலை அருகே காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி உல்லாசமாக இருந்து, இளம்பெண்ணை ஆபாசமாக புகைப்படம் எடுத்து, அவரது கணவருக்கு அனுப்பி வைத்த பாத்திரக்கடை உரிமையாளரை போலீசார் கைது செய்தனர்.திருவண்ணாமலை அடுத்த கீழ்பென்னாத்தூரை சேர்ந்தவர் வீரமணி(26). இவர் அதே பகுதியில் பாத்திரக்கடை வைத்துள்ளார். இந்த கடையில் கீழ்பென்னாத்தூர் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 22 வயது இளம்பெண் ஒருவர் வேலை செய்து வந்தார். அப்போது, வீரமணிக்கும், இளம்பெண்ணிற்கும் பழக்கம் ஏற்பட்டு, நாளடைவில் காதலாக மாறியது. பின்னர் வீரமணி, இளம்பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறி பலமுறை உல்லாசமாக இருந்ததாக கூறப்படுகிறது.  அப்போது வீரமணி, தன்னுடன் தனிமையில் இருந்ததை இளம்பெண்ணுக்கு தெரியாமல் செல்போனில் படம் எடுத்து வைத்து கொண்டாராம். பின்னர், அந்த புகைப்படத்தை இளம்பெண்ணிடம் காண்பித்து, மிரட்டி அடிக்கடி உல்லாசமாக இருந்தாராம்.

இந்நிலையில், இளம்பெண் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு வீரமணியிடம் கேட்டார். ஆனால், வீரமணி திருமணம் செய்ய மறுத்ததுடன், இனி திருமணம் குறித்ேதா அல்லது இந்த சம்பவம் குறித்தோ வெளியே தெரிவித்தால், செல்போனில் உள்ள புகைப்படத்தை நெட்டில் வெளியிடுவேன் என மிரட்டினாராம். இதனால் அதிர்ச்சியடைந்த இளம்பெண், வேலையில் இருந்து நின்றுவிட்டார். பின்னர், கடந்த சில மாதங்களுக்கு முன்பு வேறு ஒருவரை இளம்பெண் திருமணம் செய்து கொண்டார். இதையறிந்த வீரமணி தனது செல்போனில் இருந்த இளம்பெண்ணின் ஆபாச புகைப்படத்தை, அவரது கணவரின் செல்போனிற்கு அனுப்பி வைத்தார். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அவர், இளம்பெண்ணுடன் சேர்ந்து வாழ முடியாது என்றதுடன், விவாகரத்து தரும்படி கூறி, அவரது தாய் வீட்டிற்கு அனுப்பிவிட்டார்.

இதனால் பாதிக்கப்பட்ட இளம்பெண், தனது வாழ்க்கையை சீரழித்த வீரமணி மீது உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி திருவண்ணாமலை எஸ்பி அலுவலகத்தில் புகார் செய்தார். எஸ்பி சிபிசக்கரவர்த்தி இதுகுறித்து விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கும்படி திருவண்ணாமலை அனைத்து மகளிர் போலீசாருக்கு உத்தரவிட்டார். அதன்படி, சப்-இன்ஸ்பெக்டர் மீனாட்சி வழக்குப்பதிந்து நேற்று முன்தினம் வீரமணியை கைது செய்து, வேலூர் மத்திய சிறையில் அடைத்தார்.

Tags : Boyfriend owner ,
× RELATED அக்னி நட்சத்திரம் தொடங்கும் முன்பே...