தியாகதுருகம் மவுண்ட்பார்க் பள்ளியில் நீட் தேர்வு பயிற்சிக்கு கட்டண சலுகை

கள்ளக்குறிச்சி, ஜூன் 19:     தியாகதுருகம் மவுண்ட்பார்க் மேல் நிலைப்பள்ளியில் ஓராண்டு நீட் தேர்வு பயிற்சிக்கு சிறப்பு கட்டண சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தியாகதுருகம் மவுண்ட்பார்க் கல்வி குழுமங்களின் தாளாளர் மணிமாறன் வெளியிட்ட அறிக்கையில் கூறியதாவது, தியாகதுருகம் மவுண்ட்பார்க் மேல்நிலை பள்ளியில் நீட் தேர்வுக்கு குறைந்த கட்டணத்தில் ஓராண்டு சிறப்பு பயிற்சி வகுப்புகள் கடந்த ஆண்டு முதல் நடத்தப்படுகிறது. பிளஸ்2 முடித்து மறுமுறை நீட் தேர்வு எழுதவுள்ள மாணவர்களுக்கு ஓராண்டு பயிற்சி வகுப்பிற்கு மாணவர்கள் சேர்க்கை நடந்து வருகிறது. இதற்கான சிறப்பு கட்டண சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தாண்டு நீட் தேர்வு முடிவு மதிப்பெண் அடிப்படையில் 250 மதிப்பெண்களுக்கு மேல் பெற்ற மாணவர்களுக்கு பயிற்சி கட்டணம் முற்றிலும் இலவசமாகவும், விடுதி கட்டணத்தில் 50 சதவீதம் சலுகை வழங்கப்படுகிறது. 150 மதிப்பெண்களுக்கு மேல் எடுத்த மாணவர்களுக்கு பயிற்சி மற்றும் விடுதி கட்டணத்தில் 50 சதவீதம் சலுகை வழங்கப்படும். 100 மதிப்பெண்களுக்கு மேல் பெற்ற மாணவர்களுக்கு பயிற்சி கட்டணத்தில் 50 சதவீத சலுகை வழங்கப்படுகிறது. சிறப்பு சலுகையாக நீட் பயிற்சியில் சேர்ந்து பயிலும் அனைத்து மாணவிகளுக்கும் 50 சதவீதம் பயிற்சி கட்டண சலுகை வழங்கப்படுகிறது. நீட் பயிற்சியில் சேர்ந்து பயிலும் அனைத்து மாணவ, மாணவிகளும் தினமும் வந்து செல்ல மவுண்ட்பார்க் பள்ளி பேருந்து கட்டணம் முற்றிலும் இலவசமாக வழங்கப்படுகிறது. இந்த ஆண்டிற்கான நீட் பயிற்சி வகுப்புகள் நாளை (20ம் தேதி) முதல் துவங்க உள்ளது.  இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

× RELATED அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட அதிகமாக...