×

குமரியில் மீண்டும் கொளுத்தும் வெயில்

நாகர்கோவில், ஜூன் 18: குமரி மாவட்டத்தில் சாரல் மழை ஓய்ந்த நிலையில் மீண்டும் வெயில் கொளுத்த தொடங்கியுள்ளது. குமரி மாவட்டத்தில் கடந்த ஒரு வார காலமாக சாரல் மழை பெய்த நிலையில் அணைகளுக்கு நீர்வரத்து காணப்பட்டது. மாவட்டத்தில் வெப்பத்தின் தாக்கமும் தணிந்திருந்தது. ‘வாயு’ புயல் அரபிக்கடலில் மையம் கொண்டிருந்ததால் தொடர்ந்து மழை பெய்தவண்ணம் இருந்தது. இதனால் பேச்சிப்பாறை, பெருஞ்சாணி உள்ளிட்ட அணைகளின் நீர்மட்டமும் உயர்ந்தது. தொடர்ந்து கடந்த இரண்டு நாட்களாக மீண்டும் வெயில் கொளுத்த தொடங்கியுள்ளது. இதனால் வெப்பத்தின் தாக்கம் மீண்டும் அதிகரித்துள்ளது. மாவட்டத்தில் நேற்று காலை முதல் வெயில் கொளுத்தி வருகிறது.

மாவட்டத்தில் நேற்று காலை நிலவரப்படி பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் 11.40 அடியாக இருந்தது. பெருஞ்சாணியில் 36.80, சிற்றார்-1ல் 7.48, சிற்றார்-2ல் 7.57, பொய்கையில் 8.40, மாம்பழத்துறையாறில் 45.03 அடியும் நீர்மட்டம் காணப்பட்டது. இதற்கிடையே மீனவர்கள் வடக்கு அரபிக்கடல், மத்திய அரபிக்கடலின் மேற்கு பகுதிகள், குஜராத்தையொட்டிய கடல் பகுதிகளில் நேற்று வரை மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்றும் இந்திய கடல் தகவல் சேவை மையம் அறிவிப்பு வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

Tags : Kumari ,
× RELATED கன்னிப்பூ சாகுபடிக்கு அணைகள்...