ெதன்மேற்கு பருவமழை தொடக்கம் இயற்கை இடர்பாடுகளுக்கு உதவி பெற இலவச தொலைபேசி எண்

சேலம், ஜூன் 14: சேலம் மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ளதால் மழையினால் ஏற்படும் இயற்கை இடர்பாடுகளுக்கு உதவிபெற, கலெக்டர் அலுவலகத்தில் 24 மணிநேரமும் செயல்படும் கட்டணமில்லா தொலைபேசி எண் 1077ஐ தொடர்பு கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.  இது குறித்து அவர் வௌியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: சேலம் மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ளதால் மழையினால் ஏற்படும் இயற்கை இடர்பாடுகளுக்கு உதவி பெறவும், மேலும் புயல், வெள்ளம், நிலச்சரிவு மற்றும் தீ

ஆகியவற்றால் ஏற்படும் இயற்கை இடர்பாடுகளுக்கு உதவிபெறவும், கலெக்டர் அலுவலகத்தில்  24 மணிநேரமும் செயல்படும் கட்டணமில்லா தொலைபேசி எண். 1077ஐ தொடர்பு கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து கலெக்டர் ேராகிணி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘‘பேரிடர் காலங்களில் பொதுமக்களின் நலன்கருதி வருவாய் பேரிடர் மேலாண்மை மற்றும் தணிக்கும் துறையின் மூலமாக செல்போன் செயலி ஒன்றை அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. அந்த செயலியின் பெயர் TN-SMART. இதனை தங்கள் செல்போனில் உள்ள Google play storeல் இருந்து இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இச்செயலியின் மூலம் மழை, வெள்ளம், அதிக வெப்பம், புயல் மற்றும் பேரிடர் காலங்களில் தங்களுக்கு விழிப்பறிக்கை அனுப்பப்படும்.

அது தங்களுக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள பயனுள்ளதாக இருக்கும். இச்செயலியை அனைத்து துறை அரசு அலுவலர்கள், கல்லூரி மற்றும் பள்ளி மாணவ, மாணவிகள், தொண்டு நிறுவனங்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும், சேதமடைந்த வீடு, கால்நடை, பயிர் ஆகியவற்றின் படம் எடுத்து பதிவேற்றம் செய்யும் வசதி இச்செயலியில் உள்ளது. எனவே, இச்செயலினை அனைவரும் பதிவிறக்கம் செய்து பயன் பெறலாம்,’’ என்று தெரிவித்துள்ளார்.

Related Stories: