ஆத்தூர் நகராட்சி சார்பில் அனைத்து பள்ளிகளில் நிலவேம்பு கசாயம்

ஆத்தூர், ஜூன் 11:  ஆத்தூர் நகராட்சி சார்பில், அனைத்து பள்ளிகளிலும் நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது. ஆத்தூர் நகராட்சிக்குட்பட்ட பகுதியில் நகராட்சிப்பள்ளி மற்றும் அரசுப்பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகள் என 17 பள்ளிகள் உள்ளன. இந்த பள்ளிகளில் சுமார் 6 ஆயிரம் மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். மாணவ, மாணவிகளுக்கு நோய்கிருமிகள் தாக்குதலிருந்தும், டெங்கு காய்ச்சல் வராமல் தடுக்கும் வகையிலும் நிலவேம்பு காசாயம் வழங்க நகராட்சி ஆணையாளர் சரஸ்வதி உத்தரவிட்டார். இதனையடுத்து, அனைத்து பள்ளிகளிலும் முதற்கட்டமாக நேற்று மாணவ, மாணவிகளுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது.

முகாமில், நகராட்சி துப்புரவு அலுவலர் திருமூர்த்தி, சுகாதார ஆய்வாளர்கள் பிரபாகரன், செல்வராஜ், துப்புரவு பிரிவு மேற்பார்வையாளர்கள் உள்ளிட்ட பணியாளர்கள் ஈடுபட்டனர். நிலவேம்பு கசாயம், இந்த வாரம் முழுவதும் பள்ளிகளில் தொடர்ந்து வழங்கப்படும். மேலும், 2ம் கட்ட முகாம் ஆகஸ்ட் மாதம் 5ம் தேதியும், 3ம் கட்டமாக அக்டோபர் 1ம் தேதியும், நான்காம் கட்ட முகாம் டிசம்பர் மாதம் 2ம் தேதியும் நடத்தப்படும் என நகராட்சி துப்புரவு அலுவலர் திருமூர்த்தி தெரிவித்தார்.

Related Stories: