மலை கிராமங்களில் மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு பேரணி

தேன்கனிக்கோட்டை, ஜூன் 7: தேன்கனிக்கோட்டை அருகே, மலைகிராமங்களில் பள்ளி செல்லா குழந்தைகளை பள்ளியில் சேர்க்க வலியுறுத்தி, விழிப்புணர்வு பேரணி நடந்தது. தேன்கனிக்கோட்டை பகுதியில் உள்ள பெட்டமுகிலாளம் ஊராட்சி, கோட்டையூர் கொல்லை, சித்திக் நகர், கப்பாளம் ஆகிய மலைகிராமங்களில் பள்ளி செல்லா மற்றும் பள்ளி இடைநின்ற மாணவர்களை பள்ளிகளில் சேர்க்க வலியுறுத்தி விழிப்புணர்வு பேரணி நடந்தது. கோட்டையூர் கொல்லை கிராமத்தில் துவங்கி பல்ராஜ்நகர், கப்பாலம், சித்தாபுரம், போலக்கொல்லை உள்ளிட்ட கிராமங்கள் வழியாக பேரணி சென்றது. இதில் 50க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர். ஆர்டிசி தொண்டு நிறுவன செயலாளர் கௌரி, திட்ட இயக்குநர் ஜோசப் ஸ்டான்லி, கல்வி ஒருங்கிணைப்பாளர்கள் பெருமாள், போத்தராஜன், தன்னார்வலர் ருத்ரி, மல்லிகா, பழங்குடி தலைவர் வீரபத்திரன், மாதன் மற்றும் ஊர்பொதுமக்கள் பேரணியில் கலந்து கொண்டனர்.

Related Stories: