பிளஸ்2 சிறப்பு துணைத்தேர்வுக்கு ஹால் டிக்கெட் பதிவிறக்கலாம்

கிருஷ்ணகிரி, மே 30: பிளஸ்2 சிறப்பு துணைத்தேர்வு எழுதும் தனித்தேர்வர்கள், தேர்வுக்கூட அனுமதிச் சீட்டுகளை இணையதளம் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இதுகுறித்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: ஜூன் மாதம் நடைபெறவுள்ள பிளஸ்2 சிறப்புத் துணைத் தேர்வெழுத, அரசு தேர்வுத்துறையால் அறிவிக்கப்பட்ட நாட்களில் விண்ணப்பித்த அனைத்து தனித்தேர்வர்களும் (தட்கல் உட்பட) www.dge.tn.gov.in என்ற இணையதளத்தின் மூலம் தேர்வுக் கூட நுழைவுச் சீட்டுகளை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பழைய நடைமுறையில் (மொத்தம் மதிப்பெண்கள் 1200) தேர்வு எழுதுவோர், இணையதள பக்கத்தில் HSE JUNE 2019 SECOND YEAR HALL TICKET DOWNLOAD(old pattern 1200 marks)என்ற வாசகத்தை கிளிக் செய்ய வேண்டும். 2019 மார்ச் மேல்நிலை இரண்டாமாண்டு பொது தேர்வெழுத விண்ணப்பித்து தேர்ச்சி பெறாத, வருகை புரியாத தேர்வர்கள் மார்ச் பதிவெண் மற்றும் பிறந்த தேதியை பதிவு செய்து, தேர்வுக்கூட அனுமதிச் சீட்டினை பதிவிறக்கம் செய்துக்கொள்ளலாம். நேரடியாக ஜூன் தேர்விற்கு விண்ணப்பித்தோர் விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதியினை பதிவு செய்து அனுமதிச் சீட்டினை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

 புதிய நடைமுறையில் (மொத்த மதிப்பெண்கள் 600) தேர்வு எழுதுவோர், HSE JUNE 2019 SECOND YEAR HALL TICKET DOWNLOAD(old pattern 600 marks)என்பதை கிளிக் செய்ய வேண்டும். பழைய நடைமுறையின்படி (மொத்தம் 1200 மதிப்பெண்கள்) தேர்வெழுதும் தனித்தேர்வர்களில் கேட்டல், பேசுதல் திறன் தேர்வில் பங்கேற்காதோர் மட்டும் மொழிப் பாடங்களில் கேட்டல், பேசுதல் திறன் தேர்விற்கு, சிறப்பு மொழி (தமிழ்) பாடத்தில் கேட்டல், பேசுதல் திறன் தேர்விற்கு தேர்வு மையத்தின் முதன்மை கண்காணிப்பாளரை அணுகி அறிந்து கொள்ளலாம்.  மேலும், செய்முறைத் தேர்வுக்கான தேதி குறித்த விவரத்தை, தனித்தேர்வர்கள் தமக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள தேர்வு மையத்தின் முதன்மை கண்காணிப்பாளரை அணுகி அறிந்து கொள்ள வேண்டும். உரிய தேர்வுக்கூட அனுமதி சீட்டின்றி, எந்த ஒரு தேர்வரும் தேர்வெழுத அனுமதிக்கப்படமாட்டார்கள். ஜூன் சிறப்பு துணை தேர்விற்கான தேர்வுக்கால அட்டவணையை, www.dge.tn.gov.in என்ற இணையதளத்திற்கு சென்று அறிந்து கொள்ளலாம்.  இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

Related Stories: