சேலம் அரசு கலைக்கல்லூரியில் பட்ட மேற்படிப்புகள் சேர்க்கை விண்ணப்பம்

சேலம், மே 25: சேலம் அரசு கலைக்கல்லூரியில் (தன்னாட்சி) பட்ட மேற்படிப்புக்கான சேர்க்கை விண்ணப்பங்கள் 27ம் தேதி முதல் வழங்கப்படுகிறது. சேலம் அரசு கலைக்கல்லூரி மாணவ மற்றும் மாணவிகள் படிக்கும் இருபாலர் கல்லூரி குமாரசாமிப்பட்டியில்  அமைந்துள்ளது. இங்கு இளங்கலை மற்றும் முதுகலை படிப்புகள் உள்ளன. இந்த கல்லூரியில் 3ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். தற்போது வரும் 2019-20ம்  கல்வியாண்டிற்கான பட்ட மேற்படிப்புகளில் சேர விரும்பும் மாணவர்களுக்கு விண்ணப்பங்கள் 27ம் தேதி வழங்கப்படுகிறது.

இதில் பட்ட மேற்படிப்பு படிப்புகளான தமிழ், ஆங்கிலம், மனித உரிமைகள், அரசியல்சார் அறிவியல், கணிதம், கணினி அறிவியல், இயற்பியல், வேதியியல், தாவரவியல், புள்ளியியல், புவியமைப்பியல் மற்றும் வரலாறு போன்ற படிப்புகளுக்கு விண்ணப்பங்கள் வழங்கப்படுகிறது.

இதுகுறித்து கல்லூரி முதல்வர் கலைச்செல்வன் கூறுகையில், ‘‘அரசு கலைக்கல்லூரியில் (தன்னாட்சி) பட்ட மேற்படிப்பிற்கு சேருவதற்கு மாணவர்களுக்கு விண்ணப்பங்கள் 27ம் தேதி முதல் வழங்கப்படுகிறது.

கல்லூரி வேலை நாட்களில் காலை 11 மணி முதல் 3.30 மணி வரை, விண்ணப்பங்கள் வழங்கப்படும். ஒசி, பிசி, எம்பிசி மாணவர்களுக்கு ₹60 விண்ணப்ப கட்டணம் வசூலிக்கப்படுகிறது. எஸ்சி, எஸ்டி மாணவர்களுக்கு இலவசமாக விண்ணப்பம் வழங்கப்படுகிறது. எஸ்சி, எஸ்டி மாணவர்கள் அசல் சாதி சான்றிதழை காண்பித்து, நகல் சான்றிதழில் கையெழுத்திட்டு சமர்ப்பித்து விண்ணப்பங்களை பெற்றுக்கொள்ளலாம்’’ என்றார்.

Related Stories: