×

சித்தூரில் 3வது நாளாக 109.4 டிகிரி வெயில் வறுத்தெடுத்தது

சித்தூர், மே 23: சித்தூரில் 3வது நாளாக 109.4 டிகிரி வெயில் வறுத்தெடுத்தது. சித்தூர் மாவட்டத்தில் எந்த ஆண்டும் இல்லாத அளவுக்கு இந்தாண்டு வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. பிப்ரவரி மாதமே வெயில் கொளுத்த ஆரம்பித்து விட்டது. அக்னி நட்சத்திரம் முடிவடைய இன்னும் 6 நாட்களே உள்ள நிலையில், சித்தூரில் வெயில் தகித்து வருகிறது. தினமும் 108 டிகிரிக்கு மேல் பதிவான வெயில், கடந்த 2 நாட்களாக 109.4 டிகிரி வெயில் பதிவானது. இந்நிலையில் நேற்றும் 3வது நாளாக சித்தூரில் 109.4 டிகிரி வெயில் பதிவாகி மக்களை வறுத்தெடுத்தது. இதனால் சாலைகளில் மக்களின் நடமாட்டம் குறைந்து காணப்பட்டது. வெயிலின் கொடுமையை தாங்காமல் இதுவரை 40க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். இதனால் பொதுமக்கள் பகல் நேரங்களில் வெளியே வராமல் வீடுகளிலேயே முடங்கி கிடக்கின்றனர். இரவும் புழுக்கம் அதிகமாக காணப்பட்டது. இதனால் பொதுமக்கள் கடுமையாக அவதிப்பட்டனர்.

Tags : Chithur ,
× RELATED சர்ச் பாதிரியார் அதிரடி கைது மதமாற்றம் செய்ய முயன்றதாக பெண் புகார்