ஆத்தூர் அருகே பைக் மீது தனியார் பஸ் மோதி 2 பேர் படுகாயம்

ஆத்தூர், மே 21:  ஆத்தூர், ராசிபுரம் பிரிவு சாலையில் தனியார் பஸ், பைக் மீது மோதியதில் 2பேர் படுகாயமடைந்தனர். இதை கண்டித்து, பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. சேலத்திலிருந்து ஆத்தூருக்கு தனியார் பஸ் ஒன்று, நேற்று வந்து கொண்டு இருந்தது. பஸ்சை ரகுபதி(32) என்பவர் ஓட்டி வந்தார். ஆத்தூர்- ராசிபுரம் பிரிவு ரவுண்டானாவில் வந்த போது, ஈரோடு சித்தோட்டைச் சேர்ந்த சேட்டு(55), வாழப்பாடி வெள்ளாளப்பட்டியைச் சேர்ந்த சவுந்தரபாண்டியன்(42) ஆகியோர், பைக்கில் திரும்ப முயன்றனர். இதை டிரைவர் கவனிக்காததால், பைக் மீது பஸ் மோதி விபத்துக்குள்ளானது. இதில், பைக்கில் வந்த இருவரும் படுகாயமடைந்தனர். அங்கிருந்தவர்கள் அவர்களை மீட்டு, ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர், மேல்சிகிச்சைக்காக, சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனனர்.

இதனிடையே, விபத்தை நேரில் கண்ட அப்பகுதி மக்கள், திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் சேலம்-ராசிபுரம் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்த ஆத்தூர் டவுன் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து, மறியலில் ஈடுபட்டவர்களிடம் ேபச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து, போராட்டத்தை கைவிட்டு மக்கள் கலைந்து சென்றனர். இதுகுறித்து அவர்கள் கூறுகையில், ‘சேலம்-ராசிபுரம் சாலை சந்திப்பில், பயணிகளை இறக்கி விடும் இடத்தில் ஆக்கிரமிப்புகள் அதிகம் உள்ளது. இதனால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. ஆனால், போக்குவரத்து போலீசார் இதை கண்டுகொள்ளாதால், இப்பகுதியில் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது,’ என்றனர்.

Related Stories: