×

உள்ளாட்சித் தேர்தலில் ஒரு வாக்குச்சாவடி அதிகரிப்பு

தேனி, மே. 17: உள்ளாட்சித் தேர்தல் விரைவில் நடத்துவதற்கான ஆயத்தப் பணிகள் நடந்து வருகிறது. முதற்கட்டமாக வரைவு வாக்குச்சாவடி அமைக்கும் பணி நடந்தது. இதில் வரைவு வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டதில் ஏதேனும் மாற்றம் தேவைப்பட்டால் இதுகுறித்து கருத்து தெரிவிக்க மே 2 ம்தேதி வரை காலஅவகாசம் பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சியினருக்கு வழங்கப்பட்டது. பின்னர், இந்த காலஅவகாசம் மே 14 ம்தேதி வரை நீட்டிக்கப்பட்டது. தேனி மாவட்டத்தில் தேனி, பெரியகுளம், போடி, சின்னமனூர், கம்பம், கூடலூர் ஆகிய 6 நகராட்சிகள், தேனி, பெரியகுளம், போடி, சின்னமனூர், கம்பம், உத்தமபாளையம், ஆண்டிபட்டி, கடமலைக்குண்டு- மயிலாடும்பாறை ஆகிய எட்டு ஊராட்சி ஒன்றியங்கள், 22 பேரூராட்சிகள், ஒரு மாவட்ட ஊராட்சி என உள்ளாட்சி அமைப்புகள் உள்ளன. உள்ளாட்சித் தேர்தல் நடக்கும் போது வாக்காளர்கள் வாக்களிக்க வசதியாக 1161 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு, இதனை வரைவு வாக்குச்சாவடி பட்டியலாக வெளியிடப்பட்டது.இப்பட்டியல் அனைத்து தாலுகா அலுவலகங்கள், உள்ளாட்சி நிர்வாக அலுவலகங்களில் பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டது.

 
இதில் கூடுதலாக வாக்காளர்கள் இருந்தாலோ, தொலைதூரத்தில் வாக்குச்சாவடி இருந்தாலோ கருத்து தெரிவிக்க மே 14ம் தேதி வரை காலஅவகாசம் வழங்கப்பட்டது. காலஅவகாசம் முடிவடைந்ததையடுத்து, தற்போது எந்த உள்ளாட்சி அமைப்புகளில் எதிர்ப்பு கருத்து வந்துள்ளது என அறிக்கையினை மாவட்ட நிர்வாகம் கேட்டுள்ளது. இதில் தேனி மாவட்டத்திலேயே பெரியகுளம் நகராட்சி எல்லையில் வடகரை பகுதியில் மட்டும் ஒரு வாக்குச்சாவடியில் குறைந்த பட்சம் இருக்க வேண்டிய 1200 வாக்குகளுக்கும் அதிகமாக வாக்காளர் உள்ளதாகவும், இதனை இரு வாக்குச்சாவடிகளாக மாற்ற வேண்டும் என கோரிக்கை வந்துள்ளதாக கூறப்படுகிறது.
 

Tags : elections ,
× RELATED மக்களவை தேர்தல்: திரிபுராவில் 54.47% வாக்குப்பதிவு