தாந்தோணிமலை காமராஜர் நகர் பகுதியில் மண்சாலைகளால் வாகனஓட்டிகள்அவதி

கரூர், மே16: கரூர் தாந்தோணிமலை காமராஜ் நகர்ப்பகுதிகளில் தெருச்சாலைகளை தார்ச்சாலைகளாக மாற்ற வேண்டும் என இந்த பகுதியினர் எதிர்பார்க்கின்றனர். கரூர் நகராட்சிக்குட்பட்ட தாந்தோணிமலை காமராஜ் நகர்ப்பகுதியில் ஏராளமான குடியிருப்புகள் உள்ளன. இந்த குடியிருப்புகளை சுற்றிலும் தெருச்சாலைகள் உள்ளன. கடந்த பல ஆண்டுகளாகவே இந்த தெருச் சாலைகள் மண்சாலைகளாக உள்ளன. இதனை, தார்ச்சாலையாக மாற்ற வேண்டும் என இந்த பகுதியினர் கோரிக்கை விடுத்து வருகின்றனர். எனவே, இந்த பகுதியினர் நலன் கருதி, மண்சாலைகளை தார்ச்சாலைகளாக மாற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: