காடையாம்பட்டி அருகே தாயை அடித்து உதைத்த மகன் கைது

காடையாம்பட்டி, மே 15: காடையாம்பட்டி அருகே கொங்குப்பட்டி ஊராட்சி தாசனுர் பகுதியை சேர்ந்த சென்றாயன் மனைவி பச்சியம்மாள் (60). இவரது மகன் மணி (27) வேலைக்கு செல்லாமல் தினமும் மது குடித்து வந்தார். இந் நிலையில் தாய் பச்சியம்மாளிடம் குடிக்க பணம் கேட்டு தகராறு செய்துள்ளார். அப்போது பணம் கொடுக்க மறுத்த அவரது தாயை அடித்து உதைத்துள்ளார்.

Advertising
Advertising

இதில் காயமடைந்த பச்சியம்மாளை மீட்டு ஓமலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து பச்சியம்மாள் தீவட்டிப்பட்டி போலீசில் புகார் செய்தார். இதன் பேரில் தாயை தாக்கிய மணியை கைது செய்து ஓமலுர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கிளைச்சிறையில் அடைத்தனர்.

Related Stories: