இறுதி ஊர்வலத்தின்போது மூதாட்டி சடலத்தில் இருந்து நகை திருடிய வாலிபர் கைது

பெரம்பூர், மே 14: கொடுங்கையூர் எழில்நகர், ஏ-பிளாக்கை சேர்ந்த மூதாட்டி உடல் நலக்குறைவால் நேற்று முன்தினம் இறந்தார். இவரது இறுதி ஊர்வலத்தில் ஏராளமானோர் கலந்துகொண்டனர். ஊர்வலத்தின் முன் பூக்களை தூவியபடி சென்ற வாலிபர் ஒருவர், சடலத்தின் மீது விழுந்த பூக்களை எடுப்பது போல் நடித்து, மூதாட்டி காதில் இருந்த ஒரு சவரன் கம்மலை கழற்றிக்கொண்டு தப்பினார்.

Advertising
Advertising

மயானத்தில் மூதாட்டிக்கு இறுதி சடங்கு செய்ய முயன்றபோது, அவரது காதில் கம்மல் மாயமானதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். பின்னர் இதுபற்றி கொடுங்கையூர் போலீசில் புகார் செய்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில் கொடுங்கையூர் எழில்நகர் பி-பிளாக் 7வது தெருவை சேர்ந்த அரவிந்த் (19) என்பவர், மூதாட்டி சடலத்தில் இருந்து கம்மலை கழற்றி சென்றது தெரியவந்தது. அதே பகுதியில் பதுங்கியிருந்த அரவிந்தை கைது செய்தனர்.

இவர் மீது திருவொற்றியூரில் பிறந்த நாள் விழாவில் குழந்தையின் மோதிரத்தை பறித்த வழக்கு, திருமண மண்டபங்களில் கூட்ட நெரிசலை பயன்படுத்தி செல்போன், பர்ஸ் பறித்த வழக்கு உள்பட வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அந்த வாலிபரை கைது செய்து, எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

Related Stories: