×

45 ஆயிரம் வாக்காளர்கள் நீக்கம் குமரி மாவட்டத்தில் மறுவாக்குப்பதிவு திமுக மீனவரணி செயலாளர் மனு

நாகர்கோவில், ஏப்.24: குமரிமாவட்டத்தில் 45 ஆயிரம் வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ள நிலையில் மறு வாக்குபதிவுநடத்த வேண்டும் என்று திமுக மீனவரணி செயலாளர் குமரி மாவட்ட கலெக்டருக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.திமுக மாநில மீனவரணி செயலாளர் இரா.பெர்னார்டு குமரி மாவட்ட கலெக்டருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:கன்னியாகுமரி மக்களவை தொகுதி தேர்தலில் குமரி மாவட்டத்தில் உள்ள ஆரோக்கியபுரம் முதல் நீரோடி வரையுள்ள மீனவ கிராமங்களில் உள்ள 45 ஆயிரம் வாக்குகள் எந்த காரணமும் இன்றி நீக்கப்பட்டுள்ளது. இதனால் வாக்களிக்கும் உரிமையை இழந்த வாக்காளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

ஜனநாயக நெறிமுறைகளுக்கு எதிராக செயல்பட்ட அரசு அதிகாரிகளின் செயல்களை கண்டித்து ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை கொண்ட மக்களும், அரசியல் கட்சிகளும் (அதிமுக, பாஜ நீங்கலாக) மறு தேர்தல் நடத்தி வாக்குரிமை வழங்கி ஜனநாயகத்தை காத்திட அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர். கன்னியாகுமரி மக்களவை தொகுதியில் மறு வாக்குபதிவு நடத்த கோரி தேர்தல் ஆணையதிற்கு மீனவ அமைப்புகள் மனுக்கள் கொடுத்திருப்பதுடன் அவர்களின் வருத்தத்தையும், கண்டனத்தையும் தெரிவித்துள்ளனர்.
ஜனநாயகம் காப்பாற்றப்பட, அரசியல் அமைப்பு வழங்கியுள்ள வாக்களிக்கும் உரிமையை மக்கள் பெற்றிட, மக்களின் கோரிக்கையை ஏற்று கலெக்டர் விரைந்து நடவடிக்கை எடுத்து நியாயமும், நீதியும் நிலைநாட்டிட இந்த அறிக்கை மூலம் திமுக மீனவர் அணி சார்பில் கேட்டுக்கொள்கிறேன். இக்கோரிக்கைகள் குறித்து குமரி மாவட்ட சட்டமன்ற உறுப்பினர்களும், பொதுமக்களுக்கும் கோரிக்ைக வைத்துள்ளார். நியாயமான கோரிக்கையை ஏற்று ஆவன செய்ய பொதுமக்கள் சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.  இவ்வாறு மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : voters ,district ,Kumari ,DMK ,
× RELATED சட்டமன்ற உறுப்பினர்கள்...