×

தக்கலையில் கூடுதல் மாவட்ட செசன்ஸ் கோர்ட் நாளை தொடக்கம்

தக்கலை, ஏப். 24:   தக்கலையில் அமைக்கப்பட்டுள்ள கூடுதல் மாவட்ட செசன்ஸ் கோர்ட்டை ஐகோர்ட் தலைமை நீதிபதி நாளை தொடங்கி வைக்கிறார்.தக்கலையில் உள்ள பத்மனாபபுரம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் மாஜிஸ்திரேட் கோர்ட் எண் 1, எண் 2, முன்சிப் கோர்ட், கூடுதல் முன்சீப் கோர்ட், சப் ேகார்ட் ஆகியன செயல்படுகின்றன. இங்கு மாவட்ட கூடுதல் செசன்ஸ் கோர்ட் அமைக்க வேண்டும் என வழக்கறிஞர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இதன் படி அரசு கடந்த சில மாதங்களுக்கு முன் அறிவிப்பு வெளியிட்டது. இதையடுத்து கூடுதல் மாவட்ட செசன்ஸ் கோர்ட் அமைப்பதற்கான இடம் தேர்வு செய்யப்பட்டு அதற்கான பணிகள் முடிவடைந்தது.

இதன் தொடக்க விழா நாளை (25ம் தேதி) மாலை 5.30 மணிக்கு நடக்கிறது. மாவட்ட முதன்மை நீதிபதி கருப்பையா வரவேற்கிறார். சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி விஜயா கே. தகில்ரமணி தலைமை வகித்து தொடங்கி வைக்கிறார். இதில் ஐகோர்ட் நீதிபதிகள் கல்யாண சுந்தரம், மகாதேவன், நிஷா பானு, சேசஷாயி, ஜகதீஷ் சந்திரா ஆகியோர் சிறப்புரையாற்றுகின்றனர். நிகழ்ச்சியில், கலெக்டர் பிரசாந்த் எம். வடநேரே, எஸ்.பி.நாத், வக்கீல் சங்க தலைவர்கள் நாகர்கோவில் ராஜேஷ், குழித்துறை சுரேஷ், தக்கலை தினேஷ், பூதப்பாண்டி கென்னடி, இரணியல் ஜோசப்ராஜ் ஆகியோர் வாழ்த்திப் பேசுகின்றனர். மாவட்ட தலைமை குற்றவியல் நீதிபதி பாண்டியராஜ் நன்றி கூறுகிறார்.

Tags : District Sessions Court ,
× RELATED தெள்ளார் அருகே நிலத்தகராறில் விவசாயி...