×

இலங்கையில் குண்டுவெடிப்பு குமரியில் உஷார் நிலை

கன்னியாகுமரி, ஏப். 23:  இலங்கையில் தேவாலயங்கள் உட்பட 8 இடங்களில் குண்டு வெடிப்பு நடத்தப்பட்டுள்ளது. இதில் 300க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். 500க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இலங்கை குண்டுவெடிப்பு சம்பவத்தையொட்டி இந்தியாவிலும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.குமரி மாவட்டத்தில் கடற்கரை கிராமங்களான ஆரோக்கியபுரம் முதல் நீரோடி வரை கடலோர பாதுகாப்பு குழும போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலைக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது. கன்னியாகுமரி டிஎஸ்பி பாஸ்கரன் தலைமையில் ேபாலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.அதுபோல கடலோர பாதுகாப்பு குழும போலீசாரின் கட்டுப்பாட்டில் உள்ள சோதனை சாவடிகளிலும் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு வாகனங்கள் தீவிர சோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்படுகின்றன. இதுபோல கன்னியாகுமரி பகவதி அம்மன் கோயில் உட்பட மாவட்டத்தில் உள்ள முக்கிய கோயில்களிலும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. தீவிர சோதனைக்கு உட்படுத்தப்பட்ட பிறகே பக்தர்கள் கோயிலுக்குள் அனுமதிக்கப்படுகின்றனர்.


Tags : Sri Lanka ,
× RELATED இலங்கையில் கார் பந்தயத்தின் போது...