×

சித்ரா பவுர்ணமி திருவிழா

ஒட்டன்சத்திரம், ஏப்.23:  ஒட்டன்சத்திரத்தில் பழநி தண்டாயுதபாணி கோயிலை சார்ந்த காமாட்சியம்மன் கோயிலில் சித்ரா பவுர்ணமி 17ம் ஆண்டு திருவிழா 3 நாட்கள் நடந்தது. முதல் நாளில் ஏகாம்பரேஸ்வரர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு கலச வழிபாடு செய்து பூஜை செய்தனர். தலையூத்து அருவியிலிருந்து தீர்த்தம் எடுத்துவந்து சக்தி பூஜை செய்தனர். 2ம் நாளில் காமாட்சியம்மனுக்கும், ஏகாம்பரேஸ்வரருக்கும் தீர்த்தம் செலுத்தி வழிபாடு செய்யப்பட்டது. பட்டத்து விநாயகர் ஆலையத்திலிருந்து காமாட்சியம்மனுக்கும், ஏகாம்பரேஸ்வரருக்கும் அலங்கார பூஜை நடைபெற்றது.3ம் நாள் காமாட்சியம்மன் கோயிலில் பூச்செரிதல் வழிபாடு நடைபெற்றது. பின்னர் தும்மிச்சம்பட்டி காளியம்மன் கோயிலிருந்து ஊர்வலமாக முளைப்பாரி எடுத்து வந்து வழிபாடு செய்தனர். 3 நாட்களும் பக்தர்களுக்கு அன்னதானம் மற்றும் பக்தி இன்னிசை கச்சேரி, குழந்தைகள் கலை நிகழ்ச்சிகள் உள்ளிட்டவைகள் நடைபெற்றன. இதில் ஊர் முக்கியஸ்தர்கள், பொதுமக்கள், ஆன்மீக அன்பர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். ஏற்பாடுகளை ஆராதனை குழுவைச் சேர்ந்த பழனிக்குமார், கருப்புச்சாமி, முத்துச்சாமி, தங்கமுத்து, கோவிந்தசாமி, நாகராஜ், விஜயா,மீனா ஆகியோர் செய்திருந்தனர்.

Tags : Chitra Poornima Festival ,
× RELATED ஒட்டன்சத்திரம் காமாட்சியம்மன் கோயிலில் சித்ரா பவுர்ணமி திருவிழா