ஓமலூர் பகுதியில் பலத்த காற்றுக்கு வீட்டு கூரைகள் நாசம்

ஓமலூர், ஏப்.21: ஓமலூர் மற்றும் காடையாம்பட்டி பகுதியில், சில நாட்களாக கடும் வெயில் சுட்டெரித்து வந்த நிலையில், கடந்த 2 நாட்களாக மாலை வேளையில் பலத்த காற்றுடன் மழை பெய்து வருகிறது. ஓமலூர் அருகே சக்கரசெட்டியப்பட்டி, காமலாபுரம், தும்பிப்பாடி உள்ளிட்ட கிராமங்களில் பலத்த காற்றுக்கு 10க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்தன. சுழன்றடித்த காற்றுக்கு வீடுகளின் கூரைகள் பறந்து சேதமானது. காமலாபுரம் பகுதியில் வீசிய பலத்த காற்றுக்கு ராஜா என்பவரின் வீட்டு கூரை பறந்தது. மேலும், அங்கிருந்த பொருட்கள் நாசமானது. இதேபோல், சக்கரசெட்டியப்பட்டி கிராமம் தொப்பளான்காட்டுவளவு பகுதியைச் சேர்ந்த தனசேகரன் உள்பட 10க்கும் மேற்பட்டோரின் வீடும் சேதமடைந்தது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆய்வு செய்து, உரிய நிவாரணம் வழங்க வேண்டுமென கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertising
Advertising

Related Stories: