×

ஓய்வுபெற்ற அலுவலர்கள் சங்க கூட்டம்

மன்னார்குடி, ஏப். 21: தமிழ்நாடு ஓய்வு பெற்ற அலுவலர்கள் சங்கத்தின் 54வது ஆண்டு பேரவை மன்னார்குடியில் நேற்று நடைபெற்றது. பேரவை கூட்டத்திற்கு சங்கத்தின் மன்னார்குடி கிளை தலைவர் ராஜகோபாலன்  தலைமை வகித்தார். சங்கத்தின் செயலாளர்  மகாதேவன்,  பொருளாளர் பன்னீர் செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு ஓய்வு பெற்ற அலுவலர்கள் சங்கத்தின் மாநில தலைவர் மாணிக்கம், மாநில பொதுச்செயலாளர் முத்துகுமாரவேலு, மாநில பொருளாளர்  அரிகிருஷ்ணன் ஆகியோர் தீர்மானங்களை விளக்கி பேசினர். தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் பென்ஷன்தாரர்களுக்கு வழங்கப்படும் கடன் உதவிகளுக்கான வயது வரம்பை 74ல் இருந்து  80 ஆக மாற்றி அறிவிக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தீர்மானமாக நிறைவேற்றப்பட்டன. முடிவில் துணைத் தலைவர் கணேசன்  நன்றி கூறினார்.

Tags : Retired Officers Association Meeting ,
× RELATED புதுக்கோட்டையில் ஓய்வு பெற்ற அலுவலர் சங்க கூட்டம்