ரத்தினகிரீஸ்வரர் கோயிலில் தேரோட்டம்

குளித்தலை, ஏப்.21: கரூர் மாவட்டம் குளித்தலை அடுத்த அய்யர்மலை ரத்தினகிரீஸ்வரர் கோயில் சித்திரைத் தேர்த்திருவிழா கடந்த 10ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனைத் தொடர்ந்து ஐந்தாம் நாள் திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது. 17ம் தேதி இரவு குதிரை தேர் நடைபெற்றது. 18ம் தேதி காலை திருத்தேர் வடம் பிடித்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் இழுத்தனர் அதனை தொடர்ந்து மூன்றாம் நாளான நேற்று மாலை  7 மணிக்கு தேர் நிலைக்கு  வந்தடைந்தது.

Related Stories: