வையாபுரி நகர் மெயின் ரோட்டில் சிக்னல் அமைக்காததால் முட்டி மோதும் வாகனங்கள்

கரூர், ஏப். 12. வையாபுரி நகர் மெயின்ரோட்டில் சிக்னல் அமைக்காததால் வாகனங்கள் முட்டி மோதுகின்றன.கரூர் கோவை சாலையில் வையாபுரி நகர் பிரிவு சாலையில் இருந்து மெயின் ரோட்டிற்கு ஏராளமான வாகனங்கள் வருகின்றன. மெயின் ரோட்டில் இருந்து பல்வேறு பகுதிக்கு செல்லும் வாகனங்களும் கடந்து செல்கின்றன. சாலை சந்திப்பில் வரும் வாகனங்கள் அடிக்கடி முட்டி மோதிக்கொள்கின்றன. போக்குவரத்து மிகுந்த பகுதி என்பதால் போக்குவரத்து போலீசார் பணியில் அமர்த்தப்பட்டு ஒழுங்குபடுத்தி வருகின்றனர்.

எனினும் போலீசார் இல்லாத சமயங்களில் வாகனங்கள் முட்டி மோதி விபத்துக்குள்ளாகின்றன. இந்த இடத்தில் விபத்துக்களை தவிர்ப்பதற்காக சிக்னல் ஒரு பகுதியில் அமைக்கப்பட்டும் அது செயல்பாட்டிற்கு வரவில்லை.துரிதமாக இந்த சிக்னலை செயல்படுத்தி போக்குவரத்து நெரிசலை போக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

Related Stories: