×

திருவட்டார், கிள்ளியூரில் காரில் கொண்டு சென்ற ₹ 6.90 லட்சம் பறிமுதல்

குலசேகரம், மார்ச் 22: தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் நேற்று கிள்ளியூர், திருவட்டாரில் நடத்திய சோதனையில் கார்களில் கொண்டு செல்லப்பட்ட ₹ 6.90 லட்சத்தை பறிமுதல்  செய்தனர். நாடாளுமன்ற  தேர்தல் நடத்தை விதிகள் அமல்படுத்தப்பட்டுள்ளதால் ₹50 ஆயிரத்துக்கு மேல்  பணம் கொண்டு செல்கின்றவர்கள் உரிய ஆவணம் வைத்திருக்க வேண்டும் என  உத்தரவிடப்பட்டுள்ளது. வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்வதை தடுக்க  பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இதன்படி  குமரி மாவட்ட தேர்தல் பறக்கும்படை துணை தாசில்தார் வேணுகோபால் மற்றும்  அதிகாரிகள் திருவட்டார் அருகே உள்ள புலியிறங்கி பகுதியில் வாகன சோதனை  நடத்தினர்.   அப்போது அந்த வழியாக வந்த சொகுசு காரை  தடுத்து சோதனை நடத்தினர். காரில் ₹4.80 லட்சம் பணம் இருந்ததை  கண்டுபிடித்தனர். இந்த பணத்தை குலசேகரத்தை சேர்ந்த மனுபக்தன் (35) என்பவர்  கொண்டு வந்தார். பறக்கும் படையினர் பணத்தை கைப்பற்றி தக்கலை தாசில்தாரிடம்  ஒப்படைத்தார்.

கிள்ளியூர்   தாலுகா பகுதியில் பறக்கும் படை துணைத் தாசில்தார் சோபன ராணி தலைமையில்   சிறப்பு எஸ்ஐ செல்வராஜ் மற்றும் ஊழியர்கள் நேற்று காலை 8 மணிக்கு   கொல்லங்கோடு அருகே வட்டவிளையில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது கேரள   பகுதியிலிருந்து தமிழகம் நோக்கி வந்த ஒரு சொகுசு வாகனத்தை சோதனை செய்த   போது அதில் ₹2 லட்சத்து 10 ஆயிரத்து 500 இருந்தது. விசாரணையில், காரில் வந்தவர்கள் கேரள   மாநிலம் பாலராமபுரம் பகுதியை சேர்ந்த பல் மருத்துவர் கிருஷ்ணகுமார்,  அவரது   மனைவி ரஞ்சனி என்றும், பணம் மருத்துவமனையில் கலெக்சன் ஆனது என்றும்,   நாகர்கோவில் ராமவர்மபுரத்தில் உள்ள தங்களது வீட்டிற்கு கொண்டு செல்வதாகவும்   தெரிவித்தனர். அவர்கள்  வைத்திருந்த பணத்திற்கு முறையான ஆவணங்கள்  இல்லாததால் பணத்தை பறிமுதல்  செய்த அதிகாரிகள் கிள்ளியூர் தாலுகா  அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.   இதே போல் நேற்று முன்தினம் ஆலஞ்சியில்  நடத்திய சோதனையில் வாணியக்குடியை சேர்ந்த மிக்கேல்  நாயகம் என்பவரிடம் ₹1,50,020 பறிமுதல் செய்யப்பட்டது. படகு சரி செய்யவதற்காக கொண்டு செல்வதாக  கூறினாலும், அந்த பணத்துக்கு முறையான ஆவணங்கள் இல்லாததால் அதை பறிமுதல்  செய்யது கிள்ளியூர் தாலுகா அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.

Tags : Kiluvur ,Thiruvattar ,
× RELATED திருவட்டார் அருகே கல் ஏற்றி வந்த டெம்போ பறிமுதல்