புன்னை வனநாதர் கோயிலில் அபிஷேகம், அன்னதானம் இன்று நடக்கிறது

க.பரமத்தி, மார்ச் 21: புன்னை வனநாதர் கோயிலில் ஆறுமுக சுப்பிரமணியசாமிக்கு பங்குனி உத்திரவிழாவில் சண்முக அர்ச்சனை விழா சிறப்பு அபிஷேகம் மற்றும் அன்னதான விழா இன்று 21ம் தேதி நடைபெறுகிறது. விழாவையொட்டி காலை சிறப்பு அபிஷேகம் நடத்தப்படுகிறது. தொடர்ந்து புன்னை வனநாயகி உடனுறை புன்னை வனநாதர், ஆறுமுக சுப்பிரமணியசாமிக்கு பல்வேறு மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை செய்யப்பட்டு வழிபாடு நடக்கிறது. தொடர்ந்து அன்னதானம் நடைபெற உள்ளது. அன்னதானத்திற்கு தேவையான அரிசி, பருப்பு, காய்கறி மற்றும் அபிஷேகத்திற்கு தேவைப்படும் பால், தயிர், இளநீர் வழங்க விருப்பமுள்ளவர்கள் இன்று காலை 8 மணிக்குள் கோயிலில் வழங்கலாம் என கோயில் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

Related Stories: