×

தேர்தல் விதிமுறை மீறல் குறித்து தெரிவிக்க தனிக்கட்டுப்பாட்டு அறை

விழுப்புரம், மார்ச் 19: விழுப்புரம் ஆட்சியர் சுப்ரமணியன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு: மக்களவை தேர்தல் ஏப்ரல் 18ம் தேதி நடக்கிறது. இதனையொட்டி தேர்தல் நன்னடத்தை விதிகள் தற்போது நடைமுறைக்கு வந்துள்ளன. தேர்தல் நன்னடத்தை விதிமீறல்களை கண்காணிப்பதற்காக விழுப்புரம் ஆட்சியர் அலுவலகத்தில் தனியே தேர்தல் கட்டுப்பாட்டு அறை துவங்கப்பட்டுள்ளது. இந்த கட்டுப்பாட்டு அறையில் தொலைபேசி எண் 1800 425 3861 ஆகும். இந்த கட்டுப்பாட்டு அறையில் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் பணிபுரிவு அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

 இந்த கட்டுப்பாட்டு அறையில் பெறப்படும் புகார்கள் உடனுக்குடன் சம்பந்தப்பட்ட சட்டமன்ற தொகுதியில் 24 மணிநேரமும் இயங்கி கொண்டிருக்கும் பறக்கும்படையினருக்கு தெரிவிக்கப்பட்டு புகார்களின் மீது உடனுக்குடன் நடவடிக்கை எடுக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. எனவே விழுப்புரம் மாவட்டத்தில் தேர்தல் நன்னடத்தை விதிகளின் விதிமீறல் ஏதுமிருப்பின் தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்ட தங்களது புகார்களை தெரிவித்துக்கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Tags : room ,
× RELATED மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை...