×

மக்களவை தேர்தலையொட்டி வரும் 18ஆம் தேதிக்குள் 1,164 துப்பாக்கிகளை சம்பந்தப்பட்ட காவல்நிலையங்களில் ஒப்படைக்க வேண்டும் எஸ்பி உத்தரவு

வேலூர், மார்ச் 15: மக்களை தேர்தலையொட்டி வரும் 18ஆம் தேதிக்குள் 1,164 துப்பாக்கிகளை சம்பந்தப்பட்ட காவல்நிலையங்களில் ஒப்படைக்க வேண்டும் என்று வேலூர் எஸ்பி உத்தரவிட்டுள்ளார் என்று காவல்துறை அதிகாரிகள் தெரவித்தனர். தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் அடுத்த மாதம் 18ம் தேதி நடைபெற உள்ளது. தேர்தல் தேதி கடந்த 10ம் தேதி அறிவிக்கப்பட்டது. அன்று மாலை முதல் தேர்தல் நடத்தை விதிமுறைகள் நடைமுறைக்கு வந்துவிட்டது. இதையடுத்து தேர்தல் நடத்தை விதிமுறைகளை கண்காணிக்க பறக்கும்படையினர், நிலைக்கண்காணிப்பு குழுவினர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் வாகன சோதனையில் ஈடுபட்டு, பணம், பரிசு பொருட்கள் கொண்டு செல்லப்படுகிறதா? என்று தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் தமிழகத்தில் வேட்புமனுத்தாக்கல் வரும் 19ம் தேதி தொடங்க உள்ளது. இதனால் தேர்தல் சமயங்களில் ஏதேனும் அசம்பாவிதங்கள் ஏற்படாதவாறு தடுக்க தமிழகத்தில் உரிமம் பெறப்பட்டு வைத்துள்ள துப்பாக்கிகளை உடனடியாக அந்தந்த காவல்நிலையங்களில் ஒப்படைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

வேலூர் மாவட்டத்தில் மொத்தம் 1,164 பேர் உரிமம் பெற்று துப்பாக்கி வைத்துள்ளனர். இவற்றில் 530 துப்பாக்கிகள் காவல்நிலையங்களில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதில் வங்கி பாதுகாப்பு தொடர்பாக துப்பாக்கி வைத்துள்ள 246 பேர் மட்டும் உரிய கடிதம் கொடுத்தால் போதும், துப்பாக்கிகளை அவர்களே வைத்து பணியை மேற்கொள்ளலாம். துப்பாக்கி ஒப்படைக்காதவர்கள் வரும் 18ம் தேதிக்குள் சம்மந்தப்பட்ட காவல்நிலையங்களில் துப்பாக்கிகளை ஒப்படைக்க வேண்டும். என்று காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags : election ,police stations ,Lok Sabha ,SP ,
× RELATED 2024 லோக்சபா தேர்தல் பிரசாரத்தில் புது...