தேர்தல் விதி மீறல் 24 மணி நேரமும் புகார் தெரிவிக்க வசதி

கிருஷ்ணகிரி, மார்ச் 14: கிருஷ்ணகிரி நாடாளுமன்ற தொகுதியில் தேர்தல தொடர்பான விதி மீறல் புகார்களை தெரிவிக்க தொலைபேசி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: இந்திய மக்களவைத் தேர்தல் நடைபெறுவது தொடர்பான தேர்தல் அட்டவணைகள் இந்திய தேர்தல் ஆணையத்தால் கடந்த 10ம் தேதி மாலை 5 மணியளவில் வெளியிடப்பட்டது. இந்த அறிவிப்பின்படி, வரும் 18ம் தேதி தமிழகத்தில் உள்ள 39 மக்களவை தொகுதிகள் மற்றும் காலியாக உள்ள 18 சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. கிருஷ்ணகிரி நாடாளுமன்ற தொகுதியில் ஊத்தங்கரை, பர்கூர், கிருஷ்ணகிரி, வேப்பனஹள்ளி, ஓசூர் மற்றும் தளி ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகள் உள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நாள் முதல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளது. அதன்படி, கிருஷ்ணகிரி நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதியில் தேர்தல் நடத்தை விதிமீறல்கள் தொடர்பான புகார்களை தெரிவிக்க ஏதுவாக மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் 24 மணி நேரமும் இயங்கும் தேர்தல் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. இந்த கட்டுப்பாட்டு அறையில் செயல்படும் 04343 233023, 233024, 233026 என்ற தொலைபேசி எண்களுக்கோ அல்லது 93852 51047 என்ற எண்ணுக்கோ தொடர்பு கொண்டு குறுஞ்செய்தி(எஸ்எம்எஸ்), வாட்ஸ்அப் மூலமும் தங்களது தேர்தல் தொடர்பான புகார்களை தெரிவிக்கலாம். இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: