சமூக சேவையில் புதிய சிறகுகள் அறக்கட்டளை

பாரதியின் கனவை நினைவாக்கும் வகையில் சேலம் மாவட்டத்தில், புதுமைப்பெண்ணாக பலதரப்பட்ட மக்களும் வியக்கும் அளவிற்கு தனது சேவையில் வலம் வந்து கொண்டிருப்பவர் ‘புதிய சிறகுகள் அறக்கட்டளை’ நிறுவனர் சமூக சேவகி சுமதி. பெண்கள் முன்னேற்றத்திற்காக பல தொழில் சார்ந்த கருத்தரங்கங்கள், பயிற்சி வகுப்புகள், வேலைவாய்ப்புகள் அமைத்து தருதல், சமூகங்களிலும், குடும்பங்களிலும் பெண்களுக்கு ஏற்படும் பிரச்னைகளுக்கும் சமூக தீர்வு ஏற்படும் வகையில் ஆலோசனைகள் வழங்குவது மற்றும் ஏழை குழந்தைகளின் கல்வி வளர்ச்சிக்காகவும், வறுமையில் வாடும் நோயாளிகளுக்கு மருத்துவ உதவி அளிப்பதிலும் மனித நேயமிக்கவராக செயல்பட்டு வருகிறார். இயற்கையின் தீரா ரசிகையான இவர், பல வருடங்களாக தனது பிறந்த நாளிலும், பல்வேறு நிகழ்ச்சிகளிலும் மரக்கன்றுகளை நட்டு பராமரித்து, தொடர்ந்து மற்றவர்களையும் நட செய்ய முன்னுதாரணமாக தன்னை ஈடுபடுத்தி கொண்டு இயற்கை ஆர்வலராகவும் உள்ளார். அடுப்பூதும் பெண்களுக்கு கல்வி எதற்கு என்னும் வாக்கியத்தை மாற்றி, அடுப்பூதும் பெண்களும் கைத்தொழில் ஒன்று கற்க வேண்டும் என்று முனைப்புடன் தொடர்ந்து முயற்சி செய்து வருகிறார். சேலம் மாவட்டத்தில் வரும் காலங்களில் பெண்களால் ‘தொழில் பூங்கா’ அமைக்க வேண்டும் என்பதை எதிர்கால திட்டமாக வைத்துள்ளார்.   பெண்கள் அமைப்புகளுக்கும், தொழிலில் சாதிக்க நினைக்கும் பெண்களுக்கும், புதிய சிறகுகள் சார்பாக மகளிர் தின நல்வாழ்த்துக்கள். வாருங்கள் இணைந்து இறக்கை விரித்து பறப்போம். புதியதோர் உலகை நோக்கி புதிய சிறகுகளாக!

Related Stories: