அரவக்குறிச்சி பகுதியில் கொட்டி தீர்த்த திடீர் மழை வெப்பம் தணிந்து மக்கள் மகிழ்ச்சி

அரவக்குறிச்சி, மார்ச் 7: அரவக்குறிச்சி பகுதியில் வெப்பத்தை தணிக்கும் வகையில் நேற்று மாலை திடீரென மழை பெய்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர். அரவக்குறிச்சி பகுதியில் திடீரென்று நேற்று மாலை இடி மின்னலுடன் மழை பெய்தது. வழக்கமாக  கோடை கால வெயில் மார்ச் மாத கடைசியில் ஆரம்பித்து மே, ஜுன் மாதம் வரை  நீடிக்கும். ஆனால் இந்த ஆண்டு பிப்ரவரி மாத கடைசியிலேயே கோடை வெயில்  ஆரம்பித்து கடுமையான வெப்பம் வீசச் துவங்கியது. இதனால் பகலில் பொதுமக்களின்  இயல்பு வாழ்கை பாதிப்படைந்தது. இந்நிலையில் அரவக்குறிச்சி ஒன்றியப்  பகுதியில் கடந்த 4 நாட்களாக வெப்பம் அதிகரித்து புழுக்கமான சூழ்நிலை  நிலவியது. இந்நிலையில் நேற்று மாலை 6.30 மணிக்கு திடீரென்று வானில்  கருமேகம் சூழ்ந்து இடி, மின்னலும் ஒரு மணி நேரம் மழை பெய்தது. இதனால்  வெப்பமான நிலை மாறி குளிர்ச்சியான சூழல்  நிலவியது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர். அரவக்குறிச்சி  ஒன்றியம் பகுதி முழுவதும் பரவலாக இந்த மழை பெய்தது.

Related Stories: