சென்னை: சென்னை மயிலாப்பூர் அருளானந்தம் தெருவை சேர்ந்தவர் அழகு தமிழ்மொழி (28). ரயில்வே பெண்கள் அணியின் கூடை பந்து வீரங்கனை. கடந்த 28ம் தேதி புதுச்சேரியில் நடைபெற்ற கூடைப்பந்து விளையாட்டு போட்டியில் கலந்து கொள்ள சென்றுவிட்டார். பின்னர் கடந்த 3ம் தேதி வீட்டிற்கு வந்து பார்த்தபோது பூட்டு உடைக்கப்பட்டு வீட்டில் இருந்த 32 இன்ச் எல்இடி டிவி ஒன்று, 2 கைக்கடிகாரம், 1 கிராம் செயின், 1 செல்போன் மாயமாகி இருந்தது.