ஓமலூர், தாரமங்கலம் ஒன்றியத்தில் 500 பாமகவினர் திமுகவில் இணைந்தனர்

ஓமலூர், மார்ச் 6:   ஓமலூர் அருகே அமரகுந்தி கிராமத்தில் பல்வேறு கட்சியினர் திமுகவில் இணையும் விழா நடைபெற்றது. விழாவிற்கு ஓமலூர் தெற்கு ஒன்றிய செயலாளர் செல்வகுமாரன், தாரமங்கலம் கிழக்கு ஒன்றிய செயலாளர் ராஜ அய்யப்பன் ஆகியோர் தலைமை வகித்தனர். மாவட்ட துணை செயலாளர் திருநாவுக்கரசு, தலைமை செயற்குழு உறுப்பினர் கார்த்திகேயன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் சேலம் மத்திய மாவட்ட செயலாளர் ராஜேந்திரன் எம்.எல்.ஏ, முன்னால் எம்.எல்.ஏ காவேரி உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் கலந்துகொண்டு தேர்தல் பணிகள் குறித்து ஆலோசனைகள் வழங்கினர். அப்போது ஓமலூர் தெற்கு ஒன்றியம் மற்றும் தாரமங்கலம் கிழக்கு ஒன்றியத்தை சேர்ந்த பாமகவினர் சுமார் 500 பேர் அக்கட்சியின் உறுப்பினர் அட்டைகளுடன் வந்து அக்கட்சியில் இருந்து விலகி திமுகவில் இணைவதாக கூறினர். அவர்களை வரவேற்ற மாவட்ட செயலாளர் ராஜேந்திரன் அனைவரையும் கட்சியில் இணைத்துக்கொண்டார்.

கூட்டத்தில்பேசிய மாவட்ட செயலாளர் ராஜேந்திரன் எம்.எல்.ஏ, திமுகவில் இணைந்த அனைவருக்கும் எப்போதும் துணை இருப்போம். அதனால், திமுக ஆட்சிக்கு வர அனைவரும் தேர்தல் களத்தில் சிறப்பாக பணியாற்ற வேண்டும். மத்தியிலும் மாநிலத்திலும் ஆட்சி மற்றதை திமுக தொண்டர்கள் ஏற்படுத்த வேண்டும் என்றார். பின்னர் பேசிய பாமக முன்னால் எம்.எல்.ஏ காவேரி பாமக ஒவ்வொரு தேர்தலின் போதும் கட்சி தொண்டர்களை அடகுவைத்து அரசியல் செய்யும் கட்சியாக தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. அதனை புரிந்துகொண்ட பாமக தொண்டர்கள் அக்கட்சியில் விலகி திமுகவில் இணைந்து வருகின்றனர் என்றார். கூட்டத்தில் ஓமலூர் வடக்கு ஒன்றிய செயலாளர் குப்புசாமி, தலைமை பொதுக்குழு உறுப்பினர் தங்கராஜ், மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் கருணாகரன், மாவட்ட மாணவரணி அமைப்பாளர் அருண்பிரசன்னா, துணை அமைப்பாளர் ரமேஷ், பொறியாளர் அணி அமைப்பாளர் ரமேஷ், துணை அமைப்பாளர் கோபால்சாமி, அருமை சுந்தரம், இளைஞரணி துணை அமைப்பாளர் மதிவாணன், ராஜி, பாலையன், கோபால், சம்பத், கோவிந்தராஜ், சின்னதம்பி, அண்ணாமலை, தங்கவேல், மாரி, பாலு, சீனிவாசன், வெங்கடேசன், தங்கதுரை உட்பட பலர் கலந்துகொண்டனர்.

Related Stories: