மகா சிவராத்திரி விழா குளித்தலை கடம்பர் கோயிலில் 1,008 தீபங்கள் ஏற்றி வழிபாடு

குளித்தலை, மார்ச் 6: கரூர் மாவட்டம் குளித்தலை கடம்பர்கோவில் கடம்பவனேஸ்வரர் கோயிலில் மகா சிவ  ராத்திரி விழாவினையொட்டி சிவராத்திரி தீப வழிபாட்டு குழுவினர் சார்பில் 20ம் ஆண்டு 1008 தீபம் ஏற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதையொட்டி முதல் காலம், இரண்டாம் காலம், மூன்றாம் காலம், நான்காம் காலம் என நான்கு கால சிறப்பு பூஜை, அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றது. இதில் சுற்றுவட்டாரத்தில் இருந்து ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

கரூர்: கரூர் கல்யாண பசுபதீசுவரர் கோயிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. கோயில் நால்வர் அரங்கில் பரதநாட்டியம், நாட்டியாஞ்சலி, பக்தி நிகழ்ச்சிகள் விடிய விடிய நடைபெற்றன. ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

Related Stories: