×

சேலம் அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் இடமாற்றம்

சேலம், பிப்.22:  சேலம் அரசு போக்குவரத்து கழகத்தில் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.சேலம் அரசு போக்குவரத்து கழக கோட்டத்திற்கு உட்பட்ட சங்ககிரி டெப்போவில் கோட்ட மேலாளராக இருந்த ராஜேந்திரன் சேலம் புதிய பஸ் ஸ்டாண்டிற்கு கோட்ட மேலாளராக மாற்றப்பட்டுள்ளார். சங்ககிரியில் கிளை மேலாளராக இருந்த கணேஷ், அங்கேயே கோட்ட மேலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இதேபோல், சங்ககிரி டெப்போ உதவி பொறியாளர் இளங்கோவை பொறுப்பு கிளை மேலாளராக நியமித்துள்ளனர். சேலம் புதிய பஸ் ஸ்டாண்ட் உதவி மேலாளர் செங்கோட்டுவேல், ராமகிருஷ்ணா ரோடு தலைமை அலுவலகத்தில் உள்ள மெக்கானிக் செட் உதவி மேலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை மேலாண்மை இயக்குநர் அரவிந்தன் பிறப்பித்துள்ளார்.  

Tags : Salem ,Government Transport Board ,
× RELATED சேலத்தில் வெயிலில் ஆஃப்பாயில் போட முயன்றவர்களிடம் போலீசார் விசாரணை..!!