×

பைக் விபத்தில் இருவர் படுகாயம்

ராஜாக்கமங்கலம், பிப். 22:  ராஜாக்கமங்கலம் அருகே அழிக்கால் வளனார் நகர் பகுதியை சேர்ந்தவர் ஷனல் ஷாலு (25) அதே பகுதியை சேர்ந்தவர் இவரது நண்பர் அனிஷ். நேற்றுமுன்தினம் பைக்கில் இருவரும் நாகர்கோவிலுக்கு சென்று விட்டு மாலை வீடு திரும்பி கொண்டிருந்தனர். பைக்கை அனிஷ் ஓட்டி வந்துள்ளார். கணபதிபுரம் அருகே வந்த போது எதிரே வந்த அடையாளம் தெரியாத கார் பைக் மீது உரசி விட்டு நிற்காமல் சென்று விட்டது.
இதில் பைக் நிலை தடுமாறி ரோட்டோரம் உள்ள காம்பவுண்ட் சுவர் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த இருவரும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இரு குறித்து ஷனல் ஷாலு கொடுத்த புகாரின் பேரில் ராஜாக்கமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : bike accident ,
× RELATED பைக் விபத்தில் வாலிபர் பலி