×

விதை பரிசோதனை நிலையத்தில் விவசாயிகள் விதைகளை பரிசோதனை செய்து கொள்ளலாம் வேளாண்மை அலுவலர் தகவல்

திருவண்ணாமலை, பிப்.21: திருவண்ணாமலையில் உள்ள விதை பரிசோதனை நிலையத்தில் விவசாயிகள் தங்களது விதைகளை பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என அதிகாரி தெரிவித்துள்ளார். திருவண்ணாமலை விதை பரிசோதனை நிலைய மூத்த வேளாண்மை அலுவலர் ஜே.சவுந்தர் நிருபர்களிடம் கூறியதாவது: திருவண்ணாமலை மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அரசு விதை பரிசோதனை நிலையத்தில் விவசாயிகள் தங்களிடம் உள்ள விதைகளை அனுப்பி அவற்றின் ஈரப்பதம், பிற ரக கலவன், முளைப்புத்திறன், புறத்தூய்மை மற்றும் பூச்சி நோய் தாக்குதல் ஆகியவற்றை பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.

அதன்பிறகு, விதைப்பு செய்து அதிக மகசூல் பெற்று கூடுதல் லாபம் பெறலாம். மேலும், நேரில் வர இயலாதவர்கள் விதை மாதிரிகளை தபால் மூலமாகவும் அனுப்பி வைக்கலாம். அவ்வாறு விதைகளை அனுப்பும்போது பயிரின் பெயர், ரகம் மற்றும் குவியல் எண் ஆகியவற்றை குறிப்பிட்ட விண்ணப்ப படிவத்துடன் ஒரு மாதிரிக்கு 30 வீதம் விதை பரிசோதனை கட்டணம் சேர்த்து அனுப்ப வேண்டும். விதை மாதிரிகளை மூத்த வேளாண்மை அலுவலர், விதை பரிசோதனை நிலையம், டாங்காப் கட்டிடம், வேங்கிக்கால், திருவண்ணாமலை-4 என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Tags : Seed Testing Center ,
× RELATED விவசாயிகள், விதை விற்பனையாளர்கள் விதை பரிசோதனை செய்து கொள்ள அழைப்பு