திருவண்ணாமலையில் வெளிநாட்டு பக்தர்கள் கிரிவலம்

திருவண்ணாமலை, பிப்.15: திருவண்ணாமலையில் பல்வேறு வெளிநாடுகளை சேர்ந்த பக்தர்கள் நேற்று கிரிவலம் வந்தனர்.திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் நாள்தோறும் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களிலிருந்து ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.தொடர்ந்து, வெளிநாடுகளில் இருந்து வரும் ஆன்மிக சுற்றுலா பயணிகள் திருவண்ணாமலையில் உள்ள பல்வேறு ஆசிரமங்கள், கோயில்களுக்கு சென்று தரிசனம் செய்து வருகின்றனர். மேலும் பல்வேறு ஆசிரமங்களுக்கு சென்று தியானம் செய்து வருகின்றனர்.இந்நிலையில், ஜெர்மன், ரஷ்யா உள்ளிட்ட பல்வேறு நாடுகளை சேர்ந்த 20க்கும் மேற்பட்ட வெளிநாட்டு பக்தர்கள் நேற்று திருவண்ணாமலையில் கிரிவலம் வந்தனர். கிரிவலத்தின் போது, அஷ்ட லிங்கங்களை வழிபட்டும், கிரிவலப்பாதையின் இயற்கை அழகினையும் கண்டு மகிழ்ந்தனர்.

× RELATED சபரிமலையில் இருமுடி இல்லாமல் 18ம்படி...