தேவாரத்தில் 5 பவுன் திருட்டு

தேவாரம், பிப்.14: தேவாரத்தில் வீட்டில் வைக்கப்பட்ட 5 பவுன் தங்கநகை திருடப்பட்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தேவாரம் டி.முணான்டிபட்டியை சேர்ந்தவர் குருநாதன்(60), டீக்கடை வைத்துள்ளார். இவரது வீட்டில் உள்ள மேஜை டிராயரில் 5பவுன் தங்க நகை வைத்துள்ளார். இதனை தேவைப்படும்போது எடுப்பது வழக்கம். கடந்த சில தினங்களுக்கு முன்பு நகையை தேடிய போது காணவில்லை. இதுகுறித்து தேவாரம் காவல்நிலையத்தில் குருநாதன் அளித்த புகாரின் பேரில், எஸ்.ஐ அப்துல்ரஹீம் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

× RELATED தேவாலயம், 4 கடைகளை உடைத்து பணம் திருட்டு