குடற்புழு நீக்கம் விடுபட்ட குழந்தைகளுக்கு இன்று ‘அல்பண்டோசால்’ மாத்திரை

நாகர்கோவில், பிப்.14: வளரும் குழந்தைகளுக்கு குடற்புழுக்கள் இருந்தால் உடல் வளர்ச்சி குறைபாடு, ரத்தசோகை மற்றும் ஊட்டச்சத்து குறைபாடு ஏற்படுகிறது. இந்த குறைபாடுகளை களைவதற்கு வருடத்திற்கு இருமுறை குடற்புழு நீக்க மாத்திரை வழங்கப்படுகிறது. இந்த வருடம் பிப்ரவரி 8ம் தேதி 1 முதல் 19 வயது வரையிலுள்ள அனைத்து குழந்தைகள் மற்றும் வளர் இளம் பருவத்தினருக்கு குடற்புழு நீக்கம் செய்யும் பொருட்டு அல்பண்டோசால் மாத்திரை வழங்கப்பட்டது.   1 முதல் 5 வயது வரை உள்ள குழந்தைகள் மற்றும் பள்ளி செல்லாத குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து மையத்திலும், அனைத்து அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளில் பயிலும் குழந்தைகளுக்கு பள்ளிகளிலும் வைத்து மதிய உணவுக்குப்பின் ஒரு மாத்திரை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. உடல் நலக்குறைவு மற்றும் இதர காரணங்களால் மாத்திரை உட்கொள்ளாத குழந்தைகளுக்கு இன்று (14ம் தேதி) மாத்திரை வழங்கப்படுகிறது என்று சுகாதாரத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.


× RELATED அரசு மருத்துவமனையில் மாத்திரை பற்றாக்குறை