டிஎன்டி பெயர் மாற்ற கூட்டம்

விருதுநகர், பிப்.8: விருதுநகர் மாவட்ட கலெக்டர் சிவஞானம் வெளியிட்டுள்ள அறிவிப்பு வருமாறு:  சீர்மரபினர் சமுதாயத்தினர் என்பதை சீர்மரபினர் பழங்குடியினர் என பெயர் மாற்றம் செய்யக் கோரி வரப்பெற்ற கோரிக்கைகளை ஆராய்ந்து அரசுக்கு அறிக்கை அளிக்க வருவாய் நிர்வாக முதன்மை செயலாளர் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது.  

இந்த குழு கூட்டம் நாளை(பிப்.9) காலை 8.30 மணிக்கு விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது. மேற்படி பொருள் தொடர்பான கருத்துக்கள் மற்றும் தொடர்பான ஆவணங்களை சமர்ப்பிக்க விரும்புவோர் கூட்டத்தில் கலந்துகொண்டு கோரிக்கைகளை குழுவிடம் எழுத்துப்பூர்வமாக நேரில் அளிக்கலாம் என தெரிவித்துள்ளார்.

Related Stories: