×

பள்ளி மாணவர்களுக்கு ஏற்ப பேருந்து நேரத்தை மாற்றியமைக்க வேண்டும்

விழுப்புரம், ஜன. 22: திருக்கோவிலூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பொன்முடி விழுப்புரம் ஆட்சியர் சுப்ரமணியனிடம் அளித்த மனுவில் கூறியிருப்ப
தாவது: திருக்கோவிலூர் தொகுதிக்கு உட்பட்ட மேலமங்கலம், எரலூர், தி.மழவராயனூர் மற்றும் சிறுமதுரை ஆகிய ஊராட்சி
களில் ஊராட்சி சபைக் கூட்டங்கள் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தேன். அப்போது அனைத்து தரப்பு மக்களின் மேலான குறையாக திமுக ஆட்சியில் இயக்கப்பட்ட திருப்பஞ்சாவடி பேருந்தை மீண்டும் பெரியசெவலை ஆலை வரை இயக்க
நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதுதான். மேலும் 136, 5டி பேருந்தின் நேரத்தை பள்ளி செல்லும் மாணவர்களுக்கு ஏதுவாக நேரத்தை மாற்றி இயக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர். அதனை நிறைவேற்றித்தருமாறு கேட்டுக்கொள்வதாக அம்மனுவில் தெரிவித்துள்ளார். அப்போது எம்எல்ஏவுடன் வந்த கிராம மக்கள் ஆட்சியரிடம் கூறியதாவது: மேலமங்கலம், பேரங்கியூர், செம்மார், வளையாம்பட்டு, எரளூர், ஏனாதி
மங்கலம் உள்ளிட்ட கிராமங்களில் ரேஷன் பொருட்கள் முறையாக வழங்கப்படுவதில்லை. செங்கல்வராயன் கூட்டுறவு சர்க்கரை ஆலை வழங்க வேண்டிய நிலுவைத்தொகையை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.

Tags :
× RELATED பாலியல் பலாத்காரம் செய்து சிறுமியை கொன்ற வாலிபருக்கு ஆயுள் தண்டனை