×

பொதுப்பணி பொறியாளர்கள் விடுப்பு எடுத்து தர்ணா

புதுச்சேரி, ஜன. 22: பொதுப்பணித்துறையில் பணிபுரியும் பொறியாளர்கள் துறை செயலரை கண்டித்து நேற்று விடுப்பு எடுத்து தர்ணாவில் ஈடுபட்டதால் பணிகள் பாதிக்கப்பட்டன.பொதுப்பணித்துறை பொறியாளர் பதவிகளில் ேநரடியாகவும், பதவி உயர்வு மூலமாகவும் ஏற்பட்டுள்ள 100க்கும் மேற்பட்ட காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும், விடுபட்ட அனைவருக்கும் எம்ஏசிபி வழங்க வேண்டும், முறையான மாற்றல் கொள்கையை அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கையை பொதுப்பணித்துறை பொறியாளர் சங்கத்தினர் நீண்டநாட்களாக வலியுறுத்தி வருகின்றனர்.
அவர்களின் கோரிக்கைகள் நிறைவேறாத நிலையில் நேற்று பொறியாளர்கள் ஒரு நாள் விடுப்பு பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் அலுவலகம் முன்பு தர்ணாவில் ஈடுபட்டனர்.இஸ்மாயில் தலைமை தாங்கினார். சங்க நிர்வாகிகள் எழில்வண்ணன், ராதாகிருஷ்ணன், சிவச்சந்திரன், ரத்தினகுமார், சம்மேளனம் சார்பில் பாலமோகனன், பிரேமதாசன், ராதாகிருஷ்ணன், ரவிச்சந்திரன், மோகனசுந்தரம், நமச்சிவாயம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் 100க்கும் மேற்பட்ட பொறியாளர்கள் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர். அப்போது தங்களின் நியாயமான பிரச்னைகளை தீர்ப்பதற்கு துறை செயலர் இடையூறு செய்வதாக குற்றம் சாட்டினர். கோரிக்கை நிறைவேறும்வரை போராட்டத்தை தொடரப்போவதாகவும் பொறியாளர்கள் சங்கத்தினர் அறிவித்துள்ளனர். இதேபோல் காரைக்கால், மாகே, ஏனாமிலும் வேலை நிறுத்தம் மேற்கொள்ளப்பட்டது.
பொறியாளர்களின் போராட்டம் காரணமாக பொதுப்பணித்துறையில் முக்கிய பணிகள் பாதிக்கப்பட்டது.

Tags : engineers ,
× RELATED புதுக்கோட்டையில் இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி